செவ்வாய், 27 ஏப்ரல், 2021

 Breeders Meet


Pic Courtesy : Google.com

Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடனும் எப்படி சிறப்பாக அமைப்பது பராமரிப்பது என்று பல பதிவுகள் உள்ளன. கோழி ஆடு மாடு மற்றும் இல்லாமல் மீன் காடை பல வகையான பண்ணையில் வளர்க்க கூடிய உயிரினங்கள் பற்றியும் அவர்களினால் வரும் வருமானம் பற்றியும் நவீன முறையில் பண்ணை அமைப்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த சேனலை கண்டு பயனடைய மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

சனி, 24 ஏப்ரல், 2021

 Sha Boo Three



                                               Pic Courtesy : Google.com

பிரபல ரேடியோ தொகுப்பாளர்  RJ ஷா நடத்தும் யூடுப் தளம் இது. மிக குறுகிய காலத்தில் ஆறு லட்சம் பயனாளர்கள் பெட்ரா யூடுப் சேனல் அதற்கு காரணம் இவரின் ஊக்கமூட்டும் பேச்சும் பல பிரபலங்களின் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை எப்படி சாதனை ஆக்கினர் என்பதை தன பாணியில் அருமையாக எடுத்துரைப்பார். மனம் சோர்வாக இருந்து நம்பிக்கை தளர்ந்துளீர்களானால் இந்த சேனலை கண்டு பயல் பெறுங்கள். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

திங்கள், 8 பிப்ரவரி, 2021

 புதுமை உழவன் - Pudhumai Uzhavan


                                                            Pic Courtesy : Youtube.com

புதுமை உழவன்-  விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும்  திரு ரமேஷ் அவர்கள் நடத்தும் இந்த யூடுப் தளத்தில் விவசாயம் , கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை பராமரித்தல், விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் உரங்கள் பற்றிய பல பதிவுகளை காணலாம். பயிர் பாதுகாப்பு கால்நடை பற்றிய அறிவு வளர்ப்பு என பலதரப்பட்ட பதிவுகளை தனது பாணியில் தெளிவாக தந்துள்ளார் கண்டு பயனடைவதுடன் பகிரவும். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

சனி, 6 பிப்ரவரி, 2021

 Suki Sivam Expressions


                                                             Pic Courtesy : Google.com

                                                        
Suki Sivam Expressions - பிரபல ஆன்மீக விஞ்ஞானி தத்துவவாதி நேர்மறையாக எழுச்சியூட்டும் தமிழ் பேச்சாளர் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் நடத்தும் யூடுப் தளம். தொலைக்காட்சியில் இவரது நம்பிக்கையும் தெளிவும் அழகான தமிழ் உச்சரிப்புடன் பல மேடை பேச்சுக்களை கேட்டிருப்போம் இவர் தற்போது தனது "Suki Sivam Expressions " யூடுப் தளத்திலும் தனது ஆன்மீக சிந்தனைகளையும் வாழ்க்கை பாடங்களையும் வீடியோ பதிவுகள் மூலம் நம்மை சந்திக்கிறார் அனைவரும் கண்டு பயனடையுங்கள். இவரது யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2021

 Chef YKU


Chef YKU - கின்னஸ் சாதனை படைத்த சமையற்கலை வல்லுநர் யஸ்வந்த் குமார் உமாசங்கர் அவர்கள் நடத்தும் யூடுப் சேனல் இதில் பல வகையான நவ நாகரீக உணவுகள் தமிழர் உணவுகள் உலகம் முழுக்க உள்ள பல வகையான சைவ அசைவ வகை உணவுகளை  மிக அழகாக நேர்த்தியாக செய்து அசத்துவார் கண்டு பயனடையுங்கள். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

திங்கள், 25 ஜனவரி, 2021

 Lemuria


                                            Pic Courtesy : lemurianarts.com

Lemuria - இந்த யூடுப் சேனலில் தமிழரின் பாரம்பரிய  வர்மக்கலை,களரி, சிலம்பம், இன்னும் பல தற்காப்பு கலைகளை கற்கலாம். அனுபவம் வாய்ந்த ஆசான்களால் இந்த யூடுப் சேனலில் கற்று தர படுகிறது . இவர்கள் முக்கியமாக நேரடி பயிற்சிகளை நடத்துகின்றனர். இந்த யூடுப் சேனலை கண்டு பயன் பெற மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

 Aadhisakthi Varmakalai


                                   Pic Courtesy : Aadhisakthi Varmakalai Youtube

AadhiSakthi Varmakalai - வர்மக்கலை ஆசான் பிரம்மஸ்ரீ எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார் அவர்கள் நடத்தும் இந்த யூடுப் சேனலில் தமிழரின் வர்மக்கலை அடிமுறை பற்றியும் வர்மா மருத்துவம் இயற்கை வைத்தியம் போன்ற பல அரிய பதிவுகளை விளக்கி  பதிவேற்றி உள்ளனர். மேலும் வர்மக்கலை பயிற்சியையும் நேரடியாக சென்று கற்கலாம். அழிந்து வரும் கலையான வர்மக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த யூடுப் சேனல். இந்த யூடுப் சேனலுக்கு செல்ல மேலே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும்.

  Breeders Meet Pic Courtesy : Google.com Breeders Meet - தமிழ் யூடுப் சேனலான இதில் ஆடு மாடு கோழி மீன் ஆகிய பண்ணைகளை பாரம்பரியமாகவும் தொழில்...